கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் குப்பையில் பற்றிய தீ…. புகை பரவியாதல் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் மக்கள் அவதி!

கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள குளத்து மேட்டில் சிலர் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் பலமுறை அவர்களை எச்சரித்துள்ளது. ஆனாலும் அவர்கள் குப்பை கொட்டுவதை நிறுத்தவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள குளத்து மேட்டில் கொட்டப்பட்ட குப்பை நேற்று முற்பகல் சுமார் 12.30 மணியளவில் திடீரென தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நெருப்பு மளமளவென பரவி குப்பைகள் அனைத்தும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதிவாசிகளும், குழந்தைகள், அவ்வழியாக குளத்திற்கு சென்றவர்கள் மற்றும் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றவர்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இரவு நேரத்தில் தீ அணைந்த நிலையில் புகை வந்த வண்ணமாக இருந்தது. இதனால் இரவில் தூங்க முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments