துபாயில் மனித நேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்

கீழக்கரையைச் சேர்ந்த துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

துபாயில் மனித நேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழருக்கு பாராட்டு குவிகிறது.
ஐக்கிய அரபு அமீரக அரசின் மனிதநேய முன்னோடி என்ற விசாவை பெறும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழக்கரை

ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி உள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் மனிதநேய முன்னோடி என்ற விசாவை பெறும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான விசா வழங்குவதற்கான நிகழ்ச்சி அன்வர் கன்சல்டன்சி நிறுவனத்தில் நடந்தது. இதில் அமீரக பிரமுகர் அலி செய்யது புத்தாவில் அல் மத்துருசி, அன்வர் குழுமம் அப்துல் காதர், டாம் சர்வீஸ் ஷானவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோல்டன் விசா பெற்று கீழக்கரை நகருக்கு பெருமை சேர்த்த ஹமீது யாசினுக்கு தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கம் செயற்குழு உறுப்பினரும், இஸ்லாமியாகல்வி நிறுவனங்களின் தாளாளருமான எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் களஞ்சியம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் சேக் ஹுசைன், கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் பொறியாளர் கபீர், கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துபாய் தொழிலதிபர்கள் முகமது ஜலாலுதீன், பைரோஸ் அலிக்கான், கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி, கீழக்கரை தி.மு.க, நகர செயலாளர் பஷீர் அகமது, மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார், நகர் மன்ற கவுன்சிலர்கள் எம்.எம்.கே காசிம், முகம்மது சுகைபு சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சாலிஹ் ஹுசைன் உள்பட நூற்றுக்கணக்கான அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், அனைத்து சமுதாய நிர்வாகிகளும், தொழில் அதிபர்களும் மொபைல் மற்றும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments