கோபாலப்பட்டிணத்தில் திடீரென கடல் உள்வாங்கியது.



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாட்டுப்படகு  மீன்பிடி தளம் உள்ளது. இங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் நேற்று  மீன்பிடித்து விட்டு, இரவு தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர்.

இந்தநிலையில் இன்று காலை மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க வந்தபோது, கடல்நீர் சுமார் பல மீட்டர் வரை உள்வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பாசிகள், கடல் சிற்பிகள் மற்றும் சேறு, சகதியுமாக காணப்பட்டது. தொடர்ந்து மீன்வர்கள் கரை தட்டி நின்ற தங்களது நாட்டுப்படகுகளை கடலுக்கு தள்ளி சென்று மீன்பிடிக்க சென்றனர். கோபாலப்பட்டிணம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments