இரவு நேரங்களில் இயங்கும் வணிக வளாகம், உணவகம் போன்றவற்றை மூட காவல் துறையினர் வற்புறுத்தக் கூடாது - தமிழ்நாடு டிஜிபி அறிவுறுத்தல்






இரவு நேரங்களில் இயங்கும் வணிக வளாகம், உணவகம் போன்றவற்றை மூட காவல் துறையினர் வற்புறுத்தக் கூடாது - தமிழ்நாடு டிஜிபி அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 -ன் படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (24×7) அனைத்து நாட்களிலும் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளையில் சட்ட விரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு¸ IPS.¸ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments