ஆவுடையார்கோவில், மணமேல்குடியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவையொட்டி ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பேச்சு, கவிதை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் வாரியாக நடைபெற்றது. இதற்கு நடுவராக ஆசிரியர்கள் செயல்பட்டனர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஆவுடையார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன் பரிசு வழங்கினார். ஒவ்வொரு போட்டியிலும், முதலிடம் பெற்ற மாணவர்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) புதுக்கோட்டையில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெறுகிறார்கள். முடிவில் ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

இதேேபால், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மணமேல்குடி ஒன்றியத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. போட்டியினை மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார். மணமேல்குடி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா வரவேற்றார். போட்டிக்கு நடுவர்களாக ஆசிரியர்கள் செயல்பட்டனர். 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். முடிவில் மணமேல்குடி உடற்கல்வி ஆசிரியர் காளிதாஸ் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments