திருவாரூர் வழியாக சென்னை- காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரி
திருவாரூர் வழியாக சென்னை- காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர் வழியாக சென்னை- காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

செயற்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் எடையூர். மணிமாறன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

திருவாரூர்- காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை பணிகள் நிறைவுற்றும் இதுவரை இந்த வழித்தடத்தில் சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி போன்ற ஊர்களை சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனவே இந்த வழித்தடத்தில் சென்னை வரை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கவேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த சென்னை-காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர் வழியாக மீண்டும் இயக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

காரைக்குடி வழியாக சென்னைக்கு பகலில் செல்லும் அந்தியோதயா ரெயிலை இயக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சமூக ஆர்வலர் துரை ராயப்பன், சங்க துணை செயலாளர் ஆசைத்தம்பி, செயற்குழு உறுப்பினர்கள் கமல், சசி சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments