புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை பணிகளுக்கான டெண்டர் ரத்து மதுரை ஐகோர்ட்டில் தகவல்




புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த தன. விமல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக உரிய நேரத்தில் வரைவோலை எடுத்து விண்ணப்பித்தேன். டெண்டர் நடவடிக்கையின்போது, தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் போலி ஆவணங்களை சமர்ப்பித்த தனிநபரிடம் 20 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டரை ஒதுக்குவதாக தெரியவருகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான ரூ.1.48 கோடி மதிப்பிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments