திருச்சி-மன்னார்குடி இடையே மீண்டும் டெமு ரெயில் சேவை




திருச்சி-மன்னார்குடி இடையே மீண்டும் டெமு ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

திருச்சி-மன்னார்குடி இடையே முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் (டெமு) தினமும் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த டெமு ரெயில் திருச்சியில் இருந்து வருகிற 30-ந்தேதி முதலும், மன்னார்குடியில் இருந்து 31-ந்தேதி முதலும் மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு மன்னார்குடியை சென்றடையும். பின்னர் மறுநாள் காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 9.10 மணிக்கு திருச்சியை வந்தடையும். இந்த ரெயில்கள் மன்னார்குடி செல்லும்போது, பொன்மலை, திருவெறும்பூர், சோழகம்பட்டி, அயனாபுரம், பூதலூர், ஆலக்குடி, தஞ்சை சந்திப்பு, குடிகாடு, சாலியமங்கலம், அம்மாபேட்டை, கோவில்வெண்ணி, நீடாமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும், மறுமார்க்கத்தில் திருச்சி வரும்போது, நீடாமங்கலம், கோவில்வெண்ணி, அம்மாபேட்டை, சாலியமங்கலம், குடிகாடு, தஞ்சை சந்திப்பு, ஆலக்குடி, பூதலூர், அயனாபுரம், சோழகம்பட்டி, தொண்டைமான்பட்டி, திருவெறும்பூர், மஞ்சிதிடல், பொன்மலை ஆகிய இடங்களிலும் நின்று செல்லும். இதுபோல், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சனிக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் 12-ந்தேதி வரையும், வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் 13-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் தெரிவித்துள்ளார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments