அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் பதவியேற்பு விழா
        அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் ஏழாம் ஆண்டு பதவியேற்பு விழா ரோட்டரி ஆளுநர் ஜெரால்ட் தலைமையில் நடைபெற்றது. ஸ்டார் தலைவர் முஜிபுர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி துணை ஆளுநர் சுரேஷ்குமார், மண்டல செயலாளர் பீர் சேக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், தேர்வு ஆளுநர் ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

எதிர்வரும் 22-23 ஆண்டுக்கான சியர்ஸ் தலைவராக விகாஸ் சரவணன், செயலாளராக கணேசன்,  பொருளாளராக கண்ணன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். பட்டய தலைவர் மருத்துவர் தெட்சணாமூர்த்தி ஆட்சி மன்ற குழுவை அறிமுகப்படுத்தி உரையாற்றினார் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களான கான் அப்துல் கபார் கான், அப்துல் ரஹீம், மறுத்துவர் விஜய், சையது பாபா பக்ருதீன், சீனிவாசன் கவி கார்த்திக், அப்துல் பாரி, முனைவர் சாமி வெங்கட், இப்ராம்ஷா, கலந்தர் மைதீன், தெய்வ ரத்தினம், நஸ்ருதீன், ஹாஜாமைதீன், அப்துல் காதர், முனைவர் முபாரக் அலி, மருத்துவர் முகமது அலி ஜின்னா, மருத்துவர் இளையராஜா, பழனிவேல், ஜாகிர் உசேன், கருப்பையா, குமாரசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். 

சிறப்பாக கல்வி சேவை செய்த ஆசிரியர்களுக்கும், 
அறந்தாங்கி ரோட்டரி சங்கம், அறந்தாங்கி பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம், அறந்தை ரோட்டரி சங்கம், திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு, நகராட்சி சுகாதார துறை, தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத், அக்னிசிறகுகள், கராத்தே பிரதர்ஸ் அறக்கட்டளை, கூடை பந்தாட்ட கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கும் மக்கள் சேவை விருதுகள் வழங்கப்பட்டன. 

சியர்ஸ் ஆண்டு தலைவர் விகாஸ் சரவணன் தலைமையில் நாயக்கர்பட்டி அரசு பள்ளிக்கு ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி வழங்கி இந்த ஆண்டுக்கான சேவையை துவங்கி வைத்தனர். குருங்காடுகள் உருவாக்குதல், அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைத்தல், கணிணி நூலகம் அமைத்தல் என்ற மூன்று குறிக்கோள்களை நிறைவேற்றுவோம் என உறுதி கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments