மீமிசல் மீன் ஏற்றி செல்லும் போது வேனில் இருந்து வெளியேறிய கழிவு நீரால் சுகாதார சீர்கேடு!



மீமிசலில் மீன் ஏற்றி செல்லும் வேனில் இருந்து வெளியேறிய கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால், நாகை துறைமுகம் போன்ற கடலோர பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் வஞ்சுரம், வவ்வால், மத்தி போன்ற பல்வேறு வகையான மீன்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடலில் பிடிக்கப்படும் மீன்கள் முகவர் மூலம் ஏலம் எடுக்கப்படுகிறது. பின்னர் ஐஸ் கட்டி மூலம் பதப்படுத்தப்பட்டு கூலர் (இன்சுலேட்டர்) வேன்களின் மூலம் தூத்துக்குடி மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மீன்கள் ஏற்றி செல்லும் கூலர் வேன்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிப்பதற்காக வாகனத்தின் அடிப்பகுதியில் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கழிவு நீர் நிரம்பியவுடன், ஊருக்கு வெளியில் ஒரு இடத்தில் டேங்கில் உள்ள வால்வினை திறந்து அதில் பொறுத்தப்பட்ட டியூப் வழியாக கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என்பது விதிமுறையாக இருந்து வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக நாகை பகுதியில் இருந்து புறப்படும் வாகனங்கள் திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் மீமிசல் தொண்டி இராமநாதபுரம் சாயல்குடி வழியாக தான் தூத்துக்குடி கேரளாவிற்கு செல்கிறது.

இந்நிலையில் நேற்று மாலை ஜூலை 17 மீமிசல் வழியாக சென்ற மீன் கூலர் வேனில் கழிவு நீர் டேங்கில் உள்ள வால்வில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் முழுவதும் கழிவுநீர்  வெளியேறியது. இதனால் சாலைகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தை சகித்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.  எனவே விதி முறைகளை பின்பற்றபடாமல் சாலைகளில் கழிவு நீர் வெளியேறும் மீன் வண்டிகள் மீதும், அவ்வப்பொழுது இது அசம்பாவிதம் நடக்காதவாறு போக்குவரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments