தகவல் தெரிவிக்காமல் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு: பெற்றோர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைப்பு!



கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் நேற்று பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தேர்வுக்காக ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அனைத்துப் பள்ளிகளில் பெற்றோர்கள் கலந்து கொண்டு மேலாண்மைக்குழு நிர்வாகிகளை தேர்வு செய்தனர். ஆனால் சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு அமைப்பது பற்றி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் சில குறிப்பிட்ட பெற்றோர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சென்ற ஏராளமான பெற்றோர்களும் அனைத்து பெற்றோருக்கும் தகவல் கொடுத்த பிறகே பள்ளி மேலாண்மைக்குழுவை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

அதனால் காலையில் ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் மீண்டும் மாலையில் நடத்தப்பட்டது. அப்போதும் கலந்து கொண்ட பெற்றோர்கள் அனைத்து பெற்றோர்களுக்கும் அழைப்பு கொடுத்து மேலாண்மைக்குழு நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். 

இதனால் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பெற்றோர்களுக்கு தகவல் சொல்லாமல் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்ய இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments