ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்!



ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் வரவேற்புரை மற்றும் கூட்டத்திற்கான நோக்கவுரையை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் ஆற்றினார். பார்வையாளராக கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி, கல்வியாளராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சுகுமார், ஊராட்சி பிரதிநிதியாக பானுமதியும், கலந்து கொண்டனர். 

கலந்து கொண்ட 125 பெற்றோர்கள் சார்பில் 10 பெண் மாணவிகள் பிரதிநிதியும், 5 ஆண் மாணவர்கள் பிரதிநிதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக கவிதாவும், துணைத்தலைவராக கற்பகமும், சுயநிதி குழு உறுப்பினராக மாலினியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் உறுப்பினருக்கான சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 

புரவலராக எஸ்.எம்.சி. உறுப்பினர்கள், ஆசிரியர்கள் (10 புரவலர்கள்) ரூ.10 ஆயிரத்து 500 நிதி வழங்கினார்கள். காளிமுத்து கலைக்குழு சார்பாக நாட்டுப்புறபாடல் பாடப்பட்டு எஸ்.எம்.சி. பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments