வேளாங்கண்ணி ஆலய திருவிழா மும்பை- நாகை இடையே சிறப்பு ரெயில்





வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி மும்பை - நாகை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

வேளாங்கண்ணி திருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்த பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாட்களுக்கு பெருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்ளவார்கள்.

எனவே வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் மராட்டிய பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக மத்திய ரெயில்வே 2 சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது.

சிறப்பு ரெயில்கள்

இதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந் தேதி மதியம் 1.15 மணிக்கு மும்பை எல்.டி.டி. ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:01161) மறுநாள் மாலை 5.40 மணிக்கு நாகை சென்றடையும். இதே ரெயில் (01162) 28-ந் தேதி காலை 6.50 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 3.05 மணிக்கு எல்.டி.டி. வந்தடையும்.

இதேபோல செப்டம்பர் 6-ந் தேதி மதியம் 1.15 மணிக்கு எல்.டி.டி.யில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (01163) மறுநாள் மாலை 5.40 மணிக்கு நாகை சென்றடையும். இதே ரெயில் செப்டம்பர் 8-ந் தேதி மதியம் 3.20 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு எல்.டி.டி. வந்தடையும்.

இந்த ரெயில்கள் தானே, கல்யாண், லோனாவாலா, புனே, தவுன்ட், சோலாப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுரை, திருவாரூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

01161, 01163 சிறப்பு கட்டண ரெயிலுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments