அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து இரவில் அரசு பேருந்து முன்கூட்டியே புறப்படுவதால் பயணிகள் அவதி சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை 


அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து இரவு நேரம் புறப்படும் பேருந்துகள் முன்கூட்டியே செல்வ தார், பயணிகள் அவதியடைந்து உள்ளனர். இதனால் சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அறந்தாங்கி பணிமனையில் இருந்து தினசரி இரவு 10.30 மணிக்கு அறந்தாங்கி கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 11.45 மணிக்கு கட்டுமாவடிக்கு தடம் எண் 4 நகரப் பேருந்து இயங்கிவருகிறது. இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு கட்டுமாவடி செல்லும் அப்பேருந்து கட்டுமாவடியில்
ஹால்ட் ஆகும்.
 
வெளியூர் சென்று விட்டு மேலப்பட்டு,
பெருங்காடு, நாகுடி, கண்டிச்சங்காடு, திருவப்பாடி, கட்டுமாவடி மற்றும் அந்த வழியே உள்ள பல்வேறு ஊர்களுக்குசெல்லவேண்டியவர்கள் இந்த பேருந்து மூலமே செல்லவேண்டிய நிலை உள்ளது. இது தவிர அறந்தாங்கியை கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கும் இரவு நேரப் பேருந்தாகவும் இப்பேருந்து உள்ளது. தினசரி பணி முடித்து வீடு திரும் பும் தனியார் நிறுவன பணியாளர்கள் என இந்த பேருந்தில் தினசரி ஏராளமானவர்கள் பயணித்து வருகின்றனர்.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு பிறகுகட்டுமாவடி வழியாக மணமேல்குடி செல்ல வேண்டிய பழனியில் இருந்து வரும் பேருந்து கடந்த சில மாதங்களாக இயக்கப்படாததால் தடம் எண் 4 நகரப்பேருந்தை அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இரவு 10.30 மணிக்கு பதிலாக இரவு 10மணிக்கே எடுத்துச்சென்று விடுகின் றனர்.

இதனால் இரவு 10.30 மணி நகரப்பேருந்துக்காக வரும் பெண் பயணிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இரவு நேர கடைசி இலவச பேருந்தான தடம்எண் 4 சென்றுவிட்டால்,பெண் அதற்கு அடுத்த கடைசி பேருந்தான புதுக்கோட்டையில் இருந்து மணமேல்குடி செல்லும் இரவு 11.15 பேருந்தில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக்கழக நிர்வாகம் வழக்கம் போல இரவு 10.30 மணிக்கே தடம் எண் 4 நகரப் பேருந்தை இயக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தர விடவேண்டும்எனபொது மக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தினகரன் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments