மீமிசல் அருகே முத்துக்குடாவை சேர்ந்த கூலி வேலைக்கு செல்லும்‌ விளையாட்டு வீரர்-அரசு உதவிட கோரிக்கை


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே திறமை இருந்தும் கூலி வேலைக்கு செல்லும் இறகுப்பந்து விளையாட்டு வீரர் அரசு தனக்கு பொருளுதவி அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் 

பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், புதுக்கோட்டை கூலி வேலைக்கு செல்லும் விளையாட்டு வீரர்-அரசு உதவிட கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே முத்துக்குடா கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜனகன் (வயது 27). இறகு பந்து விளையாட்டு வீரரான இவர், தேசிய அளவில் 3 முறை தங்கப்பதக்கமும், சர்வதேச அளவில் 3 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். தந்தை இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். கூலித்தொழிலாளியான தாய் கற்பகம் தன்னால் முடிந்த கூலி வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஜனகன் தனது 13-வது வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனை அறிந்த தாய் அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார். இதையும் படியுங்கள்: சென்னையில் ஒலி மாசு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அப்போதிலிருந்தே பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஜனகளின் விளையாட்டு ஆர்வத்தை அறிந்த அலுவலர்கள், சக நண்பர்கள் நாங்கள் உதவுகிறோம் விளையாட்டை தொடருமாறு அவரிடம் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜனகன் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து மாநில அளவில், தேசிய அளவில் என பல்வேறு சாதனைகள் படைத்ததோடு, சர்வதேச அளவில் பூட்டானில் நடைபெற்ற செளத் ஏசியன் போட்டியில் ஒரு முறை தங்கப்பதக்கமும், நேபாளத்தில் நடைபெற்ற ஓபன் இண்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் 2 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று விளையாட போதிய பொருளாதாரம் வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஜனகன் கூறுகையில், நான் இறகு பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் 3 முறை தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்த போதிலும் தேசிய அளவில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கிலும், வெளிநாடுகளுக்கு சென்று சர்வதேச அளவில் விளையாட லட்சக்கணக்கிலும் செலவாகிறது. என்னால் முடிந்தவரை நானே வேலை பார்த்தோ, தாய் மற்றும் நண்பர்கள் உதவியோடு இதுவரை விளையாடி விட்டேன். இனிமேலும் நான் தொடர்ந்து விளையாட தமிழக அரசு எனக்கு பொருளுதவி மற்றும் ஏதேனும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். இதற்கிடையில் தந்தையின்றி தவித்து வரும் எனது மகன் விளையாட்டில் மென்மேலும் உயர தமிழக அரசு உதவிட வேண்டும் என தாய் கற்பகம் கேட்டுக்கொண்டார்

நன்றி: மாலைமலர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments