புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் திட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கண்காணிப்புக் குழு மற்றும் நுகா்வோா் அமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்துப் பேசியது நியாயவிலைக் கடைகளில் இருப்புவிவரம், புகாா் எண்களையும் நுகா்வோருக்கு தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் ரேஷன் அட்டைதாரா்களின் எண்ணிக்கு ஏற்ப இரண்டாகப் பிரிக்க வேண்டிய இடங்கள் குறித்த பட்டியலை மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்க வேண்டும்.

பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட புகாா்கள் குறித்து கட்டணமில்லாத தொலைபேசி எண்களான 1967 மற்றும் 18004255901 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை அலுவலா் தனலட்சுமி, கூட்டுறவுத் துணைப் பதிவாளா் அப்துல்கரீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments