புதுக்கோட்டை மாவட்டம் சார் பதிவாளர் அலுவலக எல்லை சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்சார் பதிவாளர் அலுவலக எல்லை சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பதிவுத்துறையின் சார்பில், புதுக்கோட்டை வருவாய் மாவட்டம் மற்றும் வருவாய் வட்டங்களின் அடிப்படையில், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை மற்றும் காரைக்குடி பதிவு மாவட்டங்களில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் எல்லை சீரமைப்பு தொடர்பான, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் இயங்கிவரும் அறந்தாங்கி, பொன்னமராவதி, மீமிசல், சுப்பிரமணியபுரம், கீரமங்கலம் மற்றும் பேராவூரணி சார்பதிவகங்களில் உள்ள புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தை சேர்ந்த வருவாய் கிராமங்கள், அவை அமைந்துள்ள வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவகங்களுடன் இணைக்கப்பட உள்ளன.

மேலும் புதுக்கோட்டை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட 1 எண் இணை சார்பதிவகம், ஆலங்குடி, அன்னவாசல், குளத்தூர், கீழாநிலை, திருமயம், கந்தர்வகோட்டை, பெருங்களுர், மணமேல்குடி மற்றும் விராலிமலை சார்பதிவகங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களை அவை அமைந்துள்ள வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவகங்களுடன் இணைக்கப்பட உள்ளன.

இதுதொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் அரசிற்கு அனுப்பி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments