அம்மாபட்டினத்தில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார்


மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் பயணியர் நிழற்குடை கட்டும் பணியை அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி தொடக்கவிழா நடைபெற்றது. 

விழாவிற்கு அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தலைமை தாங்கி, பயணியர் நிழற்குடை கட்டும் பணியை தொடக்கி வைத்தார். 

விழாவில் மணமேல்குடி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சீனியார் என்ற முகமதுஅப்துல்லா, மாவட்டக் கவுன்சிலர் கன்சூல்மக ரிபா, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் நிலையூர் சரவணன், மன்னர் முகமது, கூடலூர் முத்து, அறந்தாங்கி நகர காங்கிரஸ் தலைவர் வீராச்சாமி, அறந்தாங்கி நகரசபை கவுன்சிலர்கள் சிவகிருபாகரன், அசா ருதீன். வனிதாதன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி :  தினகரன் 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments