பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதையடுத்து திங்கள்கிழமையும் பள்ளி கல்லூரி உட்பட பொது விடுமுறை அளிக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு நவாஸ்கனி எம்பி கோரிக்கை.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ்கனி எம்பி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் விடுத்துள்ள கோரிக்கையில்.,வருகின்ற 10-07-2022 அன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு பெரும்பான்மையானோர் வெளி ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று கொண்டாடுபவர்களாக இருக்கின்றார்கள்.

வெளியூர்களுக்கு செல்பவர்கள் திரும்பும் வகையில் மறுநாளான 11-07-2022 அன்றும் பள்ளி, கல்லூரி உட்பட பொது விடுமுறை அளித்தால் சிரமமின்றி பெற்றோர்களும், மாணவர்களும் திரும்புவதற்கு வசதியாக அமையும்.

பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறு தினம் திங்கள்கிழமையும் பள்ளி கல்லூரி உட்பட பொது விடுமுறை அளிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனி எம்பி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments