இந்திய காவல்துறையில் அதிரடிக்கு பெயர் போன பெண் அதிகாரிகளில் வந்திதா தான் சார்ந்த துறைகளில் இருப்பவர்களிடம் கூட பாரபட்சம் பார்க்காமல் நேர்மையாக நடப்பவர்.
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப்பற்றிய கடந்த கால பணியிட அனுபவங்கள் தெரிந்தால் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுவது நிச்சயம்...!
இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் போன பெண் அதிகாரிகளில் வந்திதாவும் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த இந்த பெண் ஐபிஎஸ் தமிழக கேடரில் 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ஜைச் சார்ந்தவர். தமிழகத்தில் பல இடங்களில் பணியாற்றி மக்களிடம் நல்ல பெயரை பெற்ற இவர் தான் சார்ந்த துறைகளில் இருப்பவர்களிடம் கூட பாரபட்சம் பார்க்காமல் நேர்மையாக நடப்பவர்.
இதனால் பலமுறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டாலும் தன் நேர்மையிலும் இருந்து சிறிதும் விலகாமல் இருந்த வந்திதா உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களால் சிவகங்கை சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நேரடியாக சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அதனை சட்டப்படி பதிவு செய்தார். இதன் காரணமாக அவர் கரூருக்கு மாற்றப்பட்டார்.
இதன்பின் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பினாமி என கூறப்பட்ட அதிமுக பிரமுகர் அன்புநாதனிடம் இருந்து ரூ.5 கோடி பணத்தை பறிமுதல் செய்த நிலையில் அவரை கொல்ல முயற்சி நடந்ததாகவும், வந்திதா தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் பல தகவல்கள் வதந்தியாக பரவிய பரபரப்பை ஏற்படுத்தியது.
உதவி காவல் கண்காணிப்பாளராக 2013-14 ஆம் ஆண்டுகளில் சிவகாசியிலும், 2014-15 ஆம் ஆண்டு சிவகங்கையிலும், பின் 2015-16 ஆம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராக கரூரிலும் பணியாற்றினார். அதன்பின் 2016-17 ஆம் ஆண்டில் ராஜபாளையம் பட்டாலியனிலும், 2017-19 ஆண்டில் ஆவடி பட்டாலியனிலும், 2019-21 ஆம் ஆண்டில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பியாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.