புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆக வந்திதா பாண்டே I.P.S நியமனம்3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம். புதுகோட்டைக்கு புதிய எஸ்பியா வந்திதா பாண்டே தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே புதுகோட்டை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

அதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப்பிரிவு ஐஜியாக இருந்த பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி/ இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் சென்னை அமலாக்கத்துறை ஐஜி துரைகுமார், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புப் புலனாய்வுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், புதுக்கோட்டை எஸ்பியாக இருந்த நிஷா பார்த்திபன் அயல்பணியில் மத்திய உளவுப்பிரிவுக்கு செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments