மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் நியமிக்க பிளஸ்-2 மாணவர்கள் கோரிக்கை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் நியமிக்க கோரி பிளஸ்-2 மாணவர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 வேளாண் அறிவியல் மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்து மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் தங்களுக்கான வகுப்பில் ஆங்கில பாடம் நடத்த ஆசிரியர் இல்லாமல் இருப்பதாகவும், வேறு ஆசிரியர்கள் வந்து ஆங்கில பாடம் எடுப்பது புரியவில்லை எனவும், ஆசிரியர் நியமனத்திற்கு நடவடிக்கை எடுக்கவும், விளையாட்டு பிரிவில் தங்கள் வகுப்பு மாணவர்களை பாகுபாடு பார்த்து உடற்கல்வி ஆசிரியர் அனுமதிப்பதில்லை எனவும் தெரிவித்து நடவடிக்கைக்கு கூறியிருந்தனர்.

326 மனுக்கள்

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments