ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாநில அளவிலான குறைதீர் மையம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கும் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை பதிவு செய்வதற்கும் வசதியாக மாநில அளவிலான குறை தீர்க்கும் மையம் சென்னை ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குறை தீர்க்கும் மையம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை செயல்படும். பொதுமக்கள் இந்த மையத்தை 8925422215 மற்றும் 8925422216 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) குறித்த முழு விவரங்களையும் பயனாளிகள் அறியாததால், வீடுகள் கட்டுவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, திட்டம் குறித்து அனைத்து விவரங்களையும் பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் கையேடுகள் 2,951 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments