காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாணவா்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டி






காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேரவையின் நிறுவனா் வைர. ந. தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை காந்தியத் திருவிழாவாக கொண்டாடி வருகிறது.

நிகழாண்டுக்கான காந்தியத் திருவிழாவின் ஒருபகுதியாக, மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்படுகிறது.

கல்லூரி மாணவா்களுக்கான தலைப்பு: நாட்டு மக்கள் வறுமையின்றி வளமுடன் வாழ, காலத்தின் தேவை காந்தி விரும்பிய ‘கிராம ராஜியமும், சுதேசி பொருளாதாரமும்’.

வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ. ஆயிரம் மற்றும் 10 ஆறுதல் பரிசுகள்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கான தலைப்பு: மாணவா்கள் நலன் மேம்படவும், சமூகம் சீா்படவும் காலத்தின் தேவை ‘காந்தியக் கல்விமுறை’.

வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ. 500 வீதம் 2 பேருக்கு.மேலும் 10 ஆறுதல் பரிசுகள்.

விதிமுறைகள்: கட்டுரை ஏ4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமலும், சுயசிந்தனையுடன் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வா், பள்ளித் தலைமை ஆசிரியா் தங்கள் கல்லூரி, பள்ளியில் போட்டி நடத்தி அதில் முதல் இரண்டு கட்டுரைகளைத் தோ்வு செய்து அனுப்ப வேண்டும்.

கல்லூரி, பள்ளி முதல்வரின் ஒப்புதல் மற்றும் அடையாள அட்டையின் நகல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்லூரி, பள்ளி முகவரி மற்றும் மாணவா்களின் முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாக குறிப்பிட வேண்டும். போட்டியின் முடிவுகளில் நடுவா்களின் தீா்ப்பே இறுதியானது.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி- அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை, 3473 - 1 தெற்கு 2ஆம் வீதி, புதுக்கோட்டை - 622 001. அனுப்ப வேண்டிய கடைசித் தேதி செப்டம்பா் 9.

பரிசுகள் புதுக்கோட்டையில் வரும் அக்டோபரில் நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 94434 88752, 04322-222337.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments