தமிழகம் முழுவதும் வர மிளகாய் விலை உயர்வு; இல்லத்தரசிகள் கவலை
            தமிழகம்  சுற்றுவட்டார பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு இல்லத்தரசிகள் சமையலுக்கு பயன்படுத்தும் வரமிளகாய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட விலை உயர்வு பெற்று கிலோ ரூ.260 முதல் ரூ.270 வரை விற்பனை ஆகி வருவது வேதனை அளிப்பதாக இல்லத்தரசிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் கிலோ ரூ.90 மற்றும் கிலோ ரூ.100 என்று விற்பனை ஆகி வந்த வரமிளகாய் இந்த ஆண்டு முதல் கிலோவுக்கு ரூ.160 ரூ.170 வரை கூடுதலாகி விற்பனை ஆகி வருகிறது. அதுவும் கார தன்மை அதிகம் கொண்ட ஆந்திரா மிளகாய் தான் இந்த அளவுக்கு அதிகமான விலையில் விற்பனை ஆகி வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டு மிளகாய் விலை கிலோ ரூ.220 வரை விற்பனை ஆகி வருகிறது. மேலும் பிராண்டட் மிளகாய்த்தூள் ரு 400 வரை விற்பணையாகிறது ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு பெற்று வதைத்து வரும் நிலையில், வர மிளகாய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் வேதனை அளிப்பதாக இல்லத்தரசிகள் கூறி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments