கட்டுமாவடி மார்க்கெட்டில்விற்பனைக்கு வந்த 100 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் போனதுகட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் மற்றும் இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. நேற்று வெளியூரிலிருந்து கொண்டுவரப்பட்ட விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய சுமார் 100 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் கட்டுமாவடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது.
இது புள்ளி திருக்கை என்று அழைக்கப்படுகிறது. அவ்வப்போது இதுபோன்ற ராட்சத பெரிய வகை மீன்கள் கிடைப்பது வாடிக்கையாகும். ஆனால் இந்த வகையான புள்ளி திருக்கை மிகவும் அரிதாக கிடைக்கும். இந்த திருக்கை மீன் மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தில் கொண்டு வரப்பட்ட திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், மற்ற நாட்களில் இந்த திருக்கை மீன் ரூ.12 ஆயிரத்திற்கு ஏலம் போகும். ஆனால் ஆடி மாதமாக இருப்பதால் மீன் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் குறைவாக விலை போனது. சந்தையில் இந்த திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது என்று கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments