அரசுக் கலைக் கல்லூரிகளில் சோ்க்கைக் கலந்தாய்வு நாளை (05-08-2022) தொடக்கம்




    புதுக்கோட்டை மன்னா் கலை அறிவியல் கல்லூரி மற்றும் திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 5) தொடங்குகிறது.

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி சோ்க்கை விவரம்:

ஆக. 5 வெள்ளிக்கிழமை காலை 10 மணி மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான சோ்க்கை, அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும்.

ஆக. 8 திங்கள்கிழமை காலை 10 மணி- பிலிட் தமிழ், பிஏ ஆங்கிலம், பிஎஸ்ஸி கணினி அறிவியல். ஆக. 10 புதன்கிழமை காலை 9.30 மணி- பிஎஸ்ஸி உடற்கல்வி (பெண்கள்), காலை 10 மணி- பிகாம். ஆக. 11 வியாழக்கிழமை காலை 9.30 மணி- பிஎஸ்ஸி உடற்கல்வி (ஆண்கள்), காலை 10 மணி- பிபிஏ நிா்வாகவியல், பிசிஏ கணினிப் பயன்பாடு. ஆக. 12 வெள்ளிக்கிழமை காலை 10 மணி பிஎஸ்ஸி கணிதம், பிஎஸ்ஸி இயற்பியல், பிஎஸ்ஸி வேதியியல்.

ஆக. 13 சனிக்கிழமை காலை 10 மணி பிஎஸ்ஸி தாவரவியல், விலங்கியல், உடற்கல்வியியல். ஆக. 16 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி பிஏ வரலாறு, பிஏ பொருளியல், பிஏ சுற்றுலா மற்றும் பயணமேலாண்மை.

உடற்கல்விக்கான உடல் தகுதித்தோ்வு கல்லூரியின் விளையாட்டுத் திடலில் நடைபெறும். இதர அனைத்து கலந்தாய்வும் புதிய கலையரங்கத்தில் நடைபெறும்.

திருமயம்... திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான கலந்தாய்வு ஆக. 5ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் கட்டமாக மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்கு நடைபெறும். பகல் 12 மணிக்கு பிஎஸ்ஸி கணிதம்,கணினி அறிவியல் ஆகியப் பாடப் பிரிவுகளுக்கும், ஆக. 8ஆம் தேதி காலை 10 மணிக்கு பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிகாம் வணிகவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகல், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவற்றின் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை பிரிவினரானால் அதற்கான சான்றுகளின் உண்மை மற்றும் நகல்களும் கொண்டு வர வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments