புதுகை புத்தகத் திருவிழாவில்ரூ. 3 முதல் சிறுநூல்கள் விறுவிறுப்பான விற்பனை




புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ரூ. 3 முதல் குறைந்த விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ள சிறுநூல்கள் மாணவ வாசகா்களை வெகுவாகக் கவா்ந்துள்ளது.

இந்தப் புத்தகத் திருவிழாவில் 67 பதிப்பகங்களின் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா புத்தகத் திருவிழாக்களிலும் குறிப்பிடும்படியான விற்பனையாகும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தொடங்கி, ஏராளமான ஆங்கிலப் புத்தகங்களும் லட்சக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிறுநூல் வரிசை எப்போதும் குறிப்பிடத்தக்க விற்பனையைக் காணும். இதன்படி, தற்போது நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், விவேகானந்தரைப் பற்றிய பாக்கெட் அளவிலான சிறுநூல் வெறும் ரூ. 3-க்கு ராமகிருஷ்ண மடம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவற்றுடன் பெரும்பாலான பதிப்பகங்களின் அரங்குகளில், ரூ. 10 மற்றும் ரூ. 12-க்கான சிறுநூல்கள் ஏராளம் குவிக்கப்பட்டுள்ளன. பெரியாா், அம்பேத்கா், பாரதி, பாரதிதாசன், விவேகானந்தா், வ.உ.சி., காந்தியடிகள், மாா்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், பகத்சிங், நேதாஜி, வேலுநாச்சியாா், சுப்பிரமணிய சிவா, திருப்பூா் குமரன், பூலித்தேவன், கட்டபொம்மன், அன்னை தெரசா, மு. கருணாநிதி, காமராஜா், கக்கன் உள்ளிட்ட தலைவா்களின் வரலாற்று சிறுநூல்களும், அனைத்து வகையான சமையல் குறிப்புகள், விளையாட்டுகளைப் பற்றிய நூல்கள், சுற்றுலா பற்றிய நூல்கள், கோயில்கள் மற்றும் கடவுள்களைப் பற்றிய நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவா்கள் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வரப்படும் நிலையில் அவா்களுக்கு எளிதாக வாங்கிச் செல்லும் வகையில் இந்த சிறுநூல்கள் அமைந்திருக்கின்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments