மீமிசல் கடைவீதி பகுதியில்ரூ.3 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டது.

        ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் கடைவீதி பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 26 கண்காணிப்பு கேமராக்கள் வர்த்தக சங்கம் சார்பில், புதிதாக பொருத்தப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பேசுகையில், கண்காணிப்பு கேமரா என்பது குற்றங்கள் நடைபெறுவதை கண்டுபிடிப்பதற்கும், நடைபெற இருக்கும் குற்றத்தை தவிர்ப்பதற்கும் மிகவும் முக்கியமான மூன்றாவது கண்ணாக திகழ்கிறது. இதனை கண்காணித்து பல குற்றச்செயல்களை தடுப்பதற்கு எளிய வகையாகும் என கூறினார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments