புதுக்கோட்டை - பாலக்காடு டவுன் - புதுக்கோட்டை இணைப்பு (Connection) ரயில் அட்டவணை!

புதுக்கோட்டை - பாலக்காடு டவுன் - புதுக்கோட்டை இணைப்பு (Connection) ரயில்  அட்டவணை!

புதுக்கோட்டை -  பாலக்காடு 

➽புதுக்கோட்டை-பாலக்காடு டவுன் இணைப்பு ரயில் ஞாயிறு தவிர வாரத்தில் மற்ற 6 நாட்களில் பயன்படுத்தி புதுக்கோட்டையிலிருந்து கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம்.

பாலக்காடு - புதுக்கோட்டை 

➽பாலக்காடு டவுன்-புதுக்கோட்டை இணைப்பு ரயில் சனி தவிர வாரத்தில் மற்ற 6 நாட்கள் பயன்படுத்தி பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புதுக்கோட்டைக்கு வரலாம்.

தனி தனியாக இரண்டு ரயிலுக்கு டிக்கெட் எடுப்பதை விட நேரடியாக டிக்கெட் எடுத்தால் ₹20 ரூபாய் வரை கட்டணம் குறையும்.

 உதாரணமாக கீழ உள்ள இணைப்பு ரயிலை பயன்படுத்தி புதுக்கோட்டையிலிருந்து கோவை செல்கிறீர்கள் எனில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே நேரடியாக கோவை க்கு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். கோவை வரை செல்ல புதுக்கோட்டையில் எடுத்த நேரடி முன்பதிவில்லா டிக்கெட் 2 ரயில்களிலும் பயணிக்க போதுமானது.
 
புதுக்கோட்டை-கோவை கட்டணம்-₹110/- மட்டுமே. இதே நீங்கள் புதுக்கோட்டை-திருச்சி & திருச்சி-கோவை என தனித்தனியாக டிக்கெட் எடுத்தீர்கள் எனில்(₹35/- + ₹95/-=₹130/-) ஏற்கனவே கூறியது போல ₹20/- கூடுதலாக செலவாகவும். எனவே இது போல இணைப்பு ரயில்களை பயன்படுத்தும் புதுக்கோட்டை மக்கள் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே நேரடியாக டிக்கெட் பெற்று பணத்தை மிச்சம் செய்யலாம்.

குறிப்பு: திருப்பூர், கோவைக்கு புதுக்கோட்டை இணைப்பு ரயில் அட்டவணை பலர் தொடர்ந்து கேட்டு வந்தனர் அவர்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டது.

நன்றி : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments