புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 இடங்களில் இரவு நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 இடங்களில் இருந்து 108 ஆம்புலன்சுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வல்லத்திராக்கோட்டை, காரையூர், பெரம்பூர், புனல்குளம், மழையூர், வாராப்பூர், ராஜநாயக்கன்பட்டி ஆகிய 7 இடங்களில் இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுவதில்லை எனக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் முழு நேரமும் ஆம்புலன்ஸ் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமப்பகுதிகளான இதில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு வேறு வாகனங்களை பிடித்து செல்வது சிரமம் என்பதால் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments