தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு




ஆலங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் சார்பில், வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடத்த திட்டமிட்டு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊர்வலத்திற்கு ஆலங்குடி போலீசார் அனுமதி மறுத்த நிலையில் ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து பள்ளிவாசல் அருகில் வரதட்சணை கொடுமைக்கு எதிராக கைகளில் பதாகைளை ஏந்தியவாறு ஊர்வலம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது பாரூக் மற்றும் மாவட்ட மருத்துவரணி முஹம்மது அலி தலைமை தாங்கினர். அப்போது பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments