வனக்காடுகள் இல்லாததால் கிராமப்புற பகுதிகளை நோக்கி படையெடுக்கும் காட்டு விலங்கு-பறவைகள்




வனக்காடுகள் இல்லாததால் கிராமப்புற பகுதிகளை நோக்கி காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் படையெடுத்து வருகின்றன. 
படையெடுத்து வரும் பறவைகள்  புதுக்கோட்டைமாவட்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள வயல்வெளி மற்றும் தோட்டப்பகுதிகளில் அதிக அளவில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் தஞ்சம் அடைந்து வரு கிறது. மாவட்டத்தில் அதிக இடப்பரப்பில் உள்ள அரசு வனக்காடுகள் மற்றும் தனியார் வன தோட்டங்கள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தைலமரம் மற்றும் கருவேல மரங்கள் மூலமாக, விளைநிலங்கள் அனைத்தும் மலடாக மாறி வருகிறது.

இதனால் காட்டு விலங்குகளான மான், முயல், முள்ளம்பன்றி, நரி, குரங்கு, எருது மற்றும் மயில், காடை, கவுதாறி குயில், கழுகு உள்ளிட்ட பறவை இனங்களும் இருக்க இடம் இல்லாமல் கிராமப்புற பகுதிகளை நோக்கி படையெடுக்கும் சூழல் நிலவி வரு கிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படு வது யாதெனில் புதுக்கோட்டை மாவட்டத் தில்லட்சக்கணக்கான இடப்பரப்பில் அரசு வனக்காடுகள் அனைத்தும் தைல மரங்களை நட்டு அதை வனத்துறை மூலமாகபராமரித்து வருவதேயாகும். பல்லுயிர் வனக்காடுகள்
இதனால் விலங்கு மற்றும் பறவை இனங் கள் உணவு, வசிக்க இடமின்றி கிராமப்புற பகுதிகளை நோக்கி படையெடுத்து செல்கின் றன. இவ்வாறு கிராமப்புறம் நோக்கி செல் லும் விலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டை நாய்கள், வேட்டையாடுபவர்கள் மூலமாக பலியாகும்துயர சம்பவங்களும் அங்கொன் றும் இங்கொன்றுமாக நடந்தேறி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். வீட்டிற்கு வீடு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று கூறும் அரசு வனக்காடுகளில் தைல மரங் களை நட்டு வளர்த்து வருவது எந்தவகையில் நியாயம் எனவும் சமூக வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனை உணர்ந்து நீதிமன்றங் களும் புதிய தைல மரக்கன்றுகளை நடவு செய்ய தற்போது தடை விதித்துள்ளது வர வேற்கத்தக்கதாகும். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தைல மரக்காடுகள் அனைத்தையும் முற்றிலும் அடி யோடு அழித்து, பல்லுயிர் வனக்காடுகளை உருவாக்கினால் மட்டுமே விவசாயிகள் மற் றும் வன விலங்கு, பறவைகளுக்கு உண்மை யான சுதந்திரம் கிடைத்த பெருமை ஏற்படும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments