அறந்தாங்கியில் அருள்தந்தையின் 112-வது ஜெயந்தி உலக அமைதி தின விழா முன்னிட்டு நாளை ஆக.14 சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் கருத்தரங்கம்அறந்தாங்கியில் அருள்தந்தையின் 112-வது ஜெயந்தி உலக அமைதி தின விழா முன்னிட்டு நாளை 14.08.2022 காலை 10 மணியளவில் அறந்தாங்கி LN.புரம் அறிவு திருக்கோயிலில் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கில் இஸ்லாம் மார்கத்தின் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் முனைவர்.முபாரக் அலி அவர்களும், இந்து சமயம் வலியுறுத்தும் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் உயர்திரு.மு. சற்குருநாதன் அவர்களும், கிறிஸ்தவம் வலியுறுத்தும் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் உயர்திரு.ப.ஆண்டோ பிரவின் அவர்களும், வேதாத்திரி மகரிஷியின் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் அருள்நிதி.மெ.முத்துகுமரேசன் அவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறந்தாங்கி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: முனைவர்.முபாரக் அலி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments