கீரனூர் அருகே கதவை திறந்து வைத்து தூங்கியதால் வீட்டுக்குள் புகுந்து 10 பவுன் நகைகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கீரனூர் அருகே கதவை திறந்து வைத்து தூங்கியதால் வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரோ உடைப்பு

கீரனூர் அருகே ஒடுக்கூரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ராதா (வயது 34). நேற்று முன்தினம் மதியம் மோகன் மற்றும் அவரது குழந்தைகள் விறகு வெட்டுவதற்காக காட்டு பகுதிக்கு சென்றனர். ராதா புதுக்கோட்டைக்கு சென்றிருந்தார்.

வீட்டில் மோகனின் தந்தை சின்னையா மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் சின்னையா வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு, பின் பக்க கதவை திறந்து வைத்து தூங்கி உள்ளார். இதையடுத்து வெளிேய சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

10 பவுன் நகைகள்

பின்னர் பீரோவை பார்த்த போது, அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த செல்போனையும் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராதா கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments