கலெக்டரின் பெயரில் வாட்ஸ்-அப்பில் மோசடியில் ஈடுபட முயன்ற வழக்கு சென்னை சைபர் கிரைமிற்கு மாற்றம்




புதுக்கோட்டை கலெக்டரின் பெயரில் வாட்ஸ்-அப்பில் மோசடியில் ஈடுபட முயன்ற வழக்கு சென்னை சைபர் கிரைமிற்கு மாற்றம் செய்யப்பட்டது.

கலெக்டரின் புகைப்படம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமுவின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் புரைபிள் படமாக வைத்து, கவிதாராமு என பெயரையும் கூறி மர்மநபர் ஒருவர் மோசடியில் ஈடுபட முயன்றார். இது தொடர்பாக கலெக்டர் தரப்பில் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த வாட்ஸ்-அப் எண் கொண்ட செல்போன் எண் சிக்னல் மராட்டிய மாநிலத்தில் ஒரு பகுதியை காட்டியுள்ளது. மேலும் அந்த எண் யாருடையது என விசாரித்தனர். இதில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

சென்னைக்கு மாற்றம்

இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கலெக்டரின் பெயரில் வாட்ஸ்-அப்பில் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதுபோன்ற புகார்கள் அனைத்தும் சென்னை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டது.

அந்த வகையில், கலெக்டர் கவிதாராமுவின் பெயரில் மோசடியில் ஈடுபட முயன்ற வழக்கும் மாற்றப்பட்டதாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும் சென்னை சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், ஒரே கும்பல் தான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், அதனால் மர்மநபர் குறித்து அவர்கள் விசாரித்து வருவதாகவும் கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments