ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலத்தில் செப்டம்பர் 1-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்... அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்...
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம  தாசில்தார் அலுவலகங்களில் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 100 சதவீதம் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ், விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் அட்டை வேண்டி இதுநாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடமும் விண்ணப்பங்கள் பெற்று, திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி 12-ந் தேதி திருமயத்திலும், 16-ந் தேதி கறம்பக்குடியிலும், 17-ந் தேதி குளத்தூரிலும், 20-ந் தேதி புதுக்கோட்டையிலும், 23-ந் தேதி பொன்னமராவதியிலும், 24-ந் தேதி மணமேல்குடியிலும், 25-ந் தேதி கந்தர்வகோட்டையிலும், 27-ந் தேதி ஆலங்குடியிலும், 30-ந் தேதி விராலிமலையிலும், 1-ந் தேதி ஆவுடையார்கோவிலிலும், 2-ந் தேதி இலுப்பூரிலும், 3-ந் தேதி அறந்தாங்கியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் தாசில்தார்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments