திருமயம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: 2-ம் கட்ட கலந்தாய்வு 17-ந் தேதி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி காலை 10 மணியளவில் பி.எஸ்சி. கணிதம் மற்றும் பி.எஸ்சி. கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கும், நண்பகல் 12 மணியளவில் பி.காம் (வணிகவியல்) பாடப்பிரிவிற்கும் நடைபெற உள்ளது.
மேலும் 18-ந் தேதி காலை 10 மணிக்கு பி.ஏ.தமிழ், பி.ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், தேதி மற்றும் கட்டண விவரங்கள் கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. கொண்டு வரப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரங்கள், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல் மற்றும் நகல்கள் -4), 12-ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் (அசல் மற்றும் நகல்கள் -2), நிரந்தர சாதிச்சான்றிதழ் அட்டை (அசல் மற்றும் நகல்கள் -2), இணையவழியில் பதிவு செய்த விண்ணப்பம் (நகல்கள் - 2), வருமானச் சான்றிதழ் (நகல்கள் - 2), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (4), வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகும். மேற்கண்ட தகவலை திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments