புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 497 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
    சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி, சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மானிய நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறுகணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன. எனவே இந்த கூட்டங்களில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments