பழங்குடியின தலைவர் தேசிய கொடியை ஏற்றுவதை தடுத்தால் புகார் தெரிவிக்கலாம்- மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். அதன்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சியின் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின தலைவர் தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கவோ அல்லது அதற்கான செயல்களில் முயற்சிக்கவோ கூடாது. அது இந்திய அரசியலமைப்பு சட்டம் 17-ன் படி (தீண்டாமை) தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இதுதொடர்பான புகார்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் 04322 221624, 04322 222171 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ் அப் எண் 94450 08146, 74026 07822 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments