கோபாலப்பட்டிணத்தில் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
இந்தியா முழுவதும் 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றத்துடன் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பெரிய பள்ளிவாசல்
கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ASM.செய்யது முஹம்மது அவர்கள் தலைமை வகித்தார்கள், OSM.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார். இந்த விழாவில் ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாலமன், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொது நல சேவை சங்கம்
கோபாலப்பட்டிணம் பொது நல சேவை சங்கம் அலுவலகத்தில் ASM.செய்யது முஹம்மது அவர்கள் தலைமை வகித்தார்கள், OSM.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி கொடியேற்றும் நிகழ்வை தலைமை தாங்கினார். இந்த விழாவில் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஜமாஅத் தலைவர்கள் ASM.செய்யது முஹம்மது, OSM.முஹம்மது அலி ஜின்னா தலைமை வகித்தார்கள். தேசிய கொடியினை ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி ஏற்றினார்கள்.இந்த விழாவில் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சாகுல் ஹமீது, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பஷீர் அகமது, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜய குமார் தலைமை வகித்தார், ஜமாத் தலைவர் OSM.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி பின்னர் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments