கோபாலப்பட்டிணத்திற்கு குப்பை கொட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும், அனைத்து சாலைகளும் செப்பனிட வேண்டும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் நாட்டாணி கிராமத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் 35 ஊராட்சிகள் உள்ளது. நாட்டாணிபுரசக்குடி ஊராட்சில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் துவங்கியது. தேசியக்கொடியை ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி ஏற்றி வைத்தார். பின்பு ஊராட்சி எழுத்தர் ஸ்டெல்லா பஞ்சாயத்தில் உள்ள தீர்மானம் சம்பந்தமான அறிக்கையை மக்கள் மத்தியில் வாசித்தார். இதில் ஊராட்சியில் தூய்மை குடிநீர், சாலை அமைத்தல், குளம் குட்டைகள் மராமத்து, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி சம்பந்தமாக பஞ்சாயத்தில் ஏற்றக்கூடிய தீர்மானங்களை முன் வைத்தார். பிறகு மக்கள் மத்தியில் தீர்மானம் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. 




குறிப்பாக கோபாலப்பட்டிணத்திற்கு குப்பை கொட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும், அனைத்து சாலைகளும் செப்பனிட வேண்டும் போன்றவை பெரிய அளவில் பேசப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆவுடையார்கோவில் சேர்மன் உமாதேவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தர பாண்டியன், செந்தில் குமரன் மற்றும் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், வருவாய் ஆய்வாளர் விஜயா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீமிசல் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments