ஆரணி அருகே தொடர் முறைகேடு பெண் ஊராட்சி தலைவரின் ‘செக் பவர்' ரத்து



ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது இரும்பேடு ஊராட்சி. இந்த ஊராட் சியின் தலைவராக தரணி வெங்கட்ராமன் என்பவர் உள்ளார்.

இவர் ஊராட்சி நிர்வாகத்தில் பணபரிவர்த்தனைகளை முறையாக பராமரிக்காம லும், அரசு திட்டங்கள். வளர்ச்சி பணிகளை சரி வரசெய்யாமலும், ஊராட்சியில் வீட்டுமனை பிரிவு அங்கீகாரம் வழங்குவதில் போலியான ஆவணங்கள் தயாரித்தும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. 

இது குறித்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டரிடம் முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். 

இதையடுத்து, கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில், அதிகாரிகள் இரும்பேடு ஊராட்சியில் நேரில் விசாரணை செய்தனர். பின்னர், அதன் அறிக்கையை கடந்த அதன் அறிக்கையை சில தினங்களுக்கு முன்பு கலெக்டரிடம் சமர்ப்பித்தனர். அதில், இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் பணபரிவர்த்தனைகளை முறையாக பராமரிக்காமல், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டத்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இரும்பேடு ஊராட்சியில் அதன் தலைவரால் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளையும் முடக்கம் செய்து கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஊராட்சி கணக்குகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். கலெக்டரின் இந்த உத்தரவு நகலை ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமனிடம் பிடிஓ சீனிவாசன் வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments