புதுக்கோட்டை திருச்சி பெங்களூர் வழியாக செல்லும் SSS ஹூப்ளி⇋ராமேஸ்வரம் வாராந்திர ரயிலை 'தினசரி' இயக்க‌ வேண்டும் "ஓசூர் பயணிகள் மேம்பாட்டு சங்கம்" பெங்களூரு கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!


புதுக்கோட்டை திருச்சி ,பெங்களூர் (பனஸ்வாடி , யஷ்வந்த்பூர்)  வழியாக செல்லும் SSS ஹூப்ளி⇋ராமேஸ்வரம் வாராந்திர ரயிலை 'தினசரி' இயக்க‌ வேண்டும் ஓசூர் பயணிகள் மேம்பாட்டு சங்கம் பெங்களூரு கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் 

வண்டி எண்-07355/56 ஹூப்ளி⇋ராமேஸ்வரம் இடையே  புதுக்கோட்டை வழியாக கடந்த 2 வாரங்களாக இயங்கிவரும் வாராந்திர சிறப்பு ரயிலை தினசரி இயக்க "ஓசூர் பயணிகள் மேம்பாட்டு சங்கம்" பெங்களூரு கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்த ரயில் தற்போது யெஷ்வந்த்பூர்(பெங்களுரு), பனஸ்வாடி( 
பெங்களூரு), ஓசூர்,தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக கடந்த ஆகஸ்ட் 06 முதல் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதுக்கோட்டையை நாமக்கல், சேலம், தர்மபுரி போன்ற மாவட்ட தலைநகர ரயில் நிலையங்களுடனும், தொழில் நகரங்களான ஓசூர், பெங்களூருவுடனும்,  இணைத்த முதல் நேரடி ரயில் இதுவாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments