அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்




        மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டும், அரசு உயர் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளை உறுப்பினர்களாக கொண்டு மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு திட்டங்களின் மூலமாக அனைத்து துறைகளிலும் வழங்கப்படும் உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகளின் கோரிக்கை மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments