வெறும் ₹120 இல் அறந்தாங்கி - தென்காசி (குற்றாலம்) இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கலாம்
வெறும்  ₹120 இல் அறந்தாங்கி - தென்காசி (குற்றாலம்) இடையே  5 மணி நேரத்தில் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கலாம்

வண்டி எண்- 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்)ரயில் நிலையம் அட்டவணைகள்அறந்தாங்கி - ஞாயிற்றுக்கிழமை இரவு 10.44 PM

காரைக்குடி சந்திப்பு - ஞாயிற்றுக்கிழமை இரவு 11.25 PM

மானாமதுரை சந்திப்பு - திங்கட்கிழமை அதிகாலை 12.40 AM

அருப்புக்கோட்டை   - திங்கட்கிழமை அதிகாலை‌ 01.20 AM

விருதுநகர் சந்திப்பு  - திங்கட்கிழமை அதிகாலை 02.00 AM

சிவகாசி   - திங்கட்கிழமை அதிகாலை‌ 02.25 AM

இராஜபாளையம்   - திங்கட்கிழமை அதிகாலை ‌02.52 AM

சங்கரன்கோவில்   - திங்கட்கிழமை அதிகாலை 03.17 AM

கடையநல்லூர்   - திங்கட்கிழமை அதிகாலை 03.38 AM

தென்காசி சந்திப்பு - திங்கட்கிழமை அதிகாலை ‌03.52 AM
 
அறந்தாங்கி - தென்காசி கட்டண விவரம்

முன்பதிவில்லா (Unreserved) டிக்கெட் - ₹120

படுக்கை வசதி (Sleeper) டிக்கெட் -₹385

3 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹1050

2 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹1440

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒவ்வொரு சனிக்கிழமை பகல் 12.35 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30. மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

அறந்தாங்கி - தென்காசி இடையே உள்ள நிறுத்தங்கள் 


மேலும் இந்த  ரயில் காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை,
விருதுநகர், சிவகாசி,   ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குறிப்பு : அறந்தாங்கி வழியாக செல்லும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது.. விரைவில் வாரம் இருமுறை அதன் பிறகு தினசரியாக இயங்க வாய்ப்பு உள்ளது.மேலும் அறந்தாங்கியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு தென்காசி செல்லலாம். திரும்ப தென்காசியில் இருந்து நேரடியாக 
அறந்தாங்கி வருவதற்கு சனிக்கிழமை தான் ரயில் .

அடுத்த சாய்ஸ் ரிட்டர்ன் பயணம் (செங்கோட்டை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்)

அறந்தாங்கியில் இருந்து குற்றாலம்  சென்று சுற்றி பார்த்த பின்னர் அங்கிருந்து தினசரி  தென்காசி ரயில் நிலையத்தில் மாலை 03.58 PM மணிக்கு வரும் செங்கோட்டை - மதுரை  விரைவு இரயலில்  பயணம் மேற்க்கொண்டு  செங்கோட்டை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் பொதுப்பெட்டிகள் (Unreserved) என்பதால் நீங்கள் எந்த பெட்டியில் ஏறியும் பயணம் செய்யலாம் ஒய்வு எடுக்கலாம். உட்கார்ந்து செல்ல கண்டிப்பாக இடம் கிடைக்கும்.. இரவும் 07:15 PM மணிக்கு அந்த ரயில் மதுரை வந்தடையும்‌ .

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு அங்கு இருக்கும் மாநகர பேருந்துகளில் மாட்டுத்தாவணி வரை பயணிக்கவும்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து அறந்தாங்கிக்கு மேலூர் திருப்பத்தூர் காரைக்குடி வழியாக பேருந்து மூலம் பயணம் செய்து அறந்தாங்கியை வந்தடையளாம்.

அறந்தாங்கிக்கு எப்பிடியும் இரவு 10 அல்லது 11 மணிக்கு மேலாக வந்தடையும் 

அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள் அறந்தாங்கியில் இருந்து உங்கள் ஊருக்கு பேருந்து வசதி உள்ளதா அதற்கு ஏற்றபோல் பயணத்தைத் முடிவு செய்யுங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் மதுரையில் இருந்து  சிவகங்கை காளையார்கோவில் திருவாடானை தொண்டி வழியாக உங்கள் ஊருக்கு வரவும்.. 

குற்றாலம் :
குற்றாலம் சொல்வோர் தென்காசி ரயில் நிலையத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் குற்றாலம் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை நீர்வீழ்ச்சிகள், இனிமையான வானிலை மற்றும் இடைவிடாத மழைக்காலம் உண்மையில் பார்வையாளர்களிடம் அசாதரமான கவர்ச்சியை தருகிறது. விறுவிறுப்பான காட்சியை குளிர் காற்று மூலம் அதிகரிக்கிறது. வழக்கமாக மே முதல் செப்டம்பர் மாத்த்திற்கு இடையே உள்ள காலம் பருவகாலமாகும்.

மெயின் அருவி
சிற்றருவி
ஐந்தருவி
குண்டாறு நீர்வீழ்ச்சி
புலியருவி
பழைய குற்றாலம்
செண்பகாதேவி நீர்வீழ்ச்சி

சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் எந்த நேரத்திலும் குளிப்பதற்கு தேவையான வசதிகளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனருவி மற்றும் செண்பகாதேவி அருவியை தவிர மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளும் எப்போது வேண்டுமானாலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. 

இந்த மலையில் வளர்க்கப்படும் மூலிகை தாவரங்கள் மருத்துவ குணமிக்கவை. ருமாட்டிக் மூட்டு வலிகள், நீண்டகால தலைவலி மற்றும் நரம்பு கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றால மலையில் நீண்டகாலம் தங்கியிருந்தால் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments