களமாவூர் ரெயில்வே கேட் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்வே கேட்
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள களமாவூர் மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து, பாலத்துக்கு கீழே உள்ள ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை ரெயில்வே இருப்புபாதை பொறியாளர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். பின்னர் ரெயில்வே கேட்டின் இருபுறமும் மூடப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் செய்தனர்.
38 பேர் கைது
களமாவூர் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விராலிமலை செல்லும் வழியில் உள்ள கிராமங்களுக்கு மேம்பாலம் உள்ள ½ கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி வந்து செல்ல வேண்டும். சாமி ஊர்வலம், இறுதி ஊர்வலம் மேம்பாலம் வழியே வரும்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாற்றுவழி ஏற்பாடு செய்துவிட்டு ரெயில்வே கேட்டை மூடுமாறு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு சென்றிருந்த கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையிலான போலீசார் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.