மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சிமணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி, அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய 3 குறுவள மையங்களுக்கு உட்பட்ட தொடக்கநிலை மற்றும் உயர் நிலை தன்னார்வலர்களுக்கு 2 நாள் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம் முன்னிலை வகித்தார். பயிற்சியில் எண்ணும் எழுத்தும் தொடர்பான தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களுக்கு கதைகள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாகவும், கதை சொல்லுதல் மூலமாகவும் மாணவர்களுக்கு எவ்வாறு கற்றல் கற்பித்தல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது. 

பயிற்சியின் கருத்தாளர்களாக தலைமை ஆசிரியர் தேவராஜ், ஆசிரியர்கள் குளோரி ஸ்டெல்லா, செந்தில்குமார், பிரியதர்ஷினி, சரஸ்வதி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments