அபுதாபியில் இறந்த இலுப்பூர் பகுதியை சோ்ந்த பிரேம்குமார்-ரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள புங்கினிப்பட்டியை சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மகன் பிரேம்குமார். இவர் அபுதாபியில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் அவா், கடந்த 21-ந்தேதி அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேம்குமார் இறந்து விட்டதாக, அவா்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரேம்குமார் பெற்றோர் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. விடம் தங்களது மகனின் உடலை பெற்று தரும்படி கோரிக்கையிட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கவிதாராமுவிடம் மனு ஒன்றினை அளித்தார். அதில் அபுதாபியில் இறந்த இலுப்பூர் புங்கினிப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுத்து உதவும்படி தெரிவித்திருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments