கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்




கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மணமேல்குடி அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் தலைமையில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் மீன்களை சோதனை செய்தனர். அதில் 2 கடைகளில் சுமார் 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

நோட்டீஸ்

தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு உரிமம் பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments